செல்போனில் மணிகணக்காக பேசுபவரா நீங்கள்?செல்போன் பயன்படுத்துவதால் glioma மற்றும் acoustic neuroma ஆகிய புற்றுநோய்கள் ஏற்படுகின்றன. 40 சதவீதம் glioma புற்றுநோய் ஏற்பட அதிக செல்போன் பயன்பாடு கொண்டவர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது என ஐ.ஏ.ஆர்.சி. என்னும் உலக சுகாதார அமைப்பின் ஒரு அங்கமான சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி மையம் (IARC- International Agency for Research on Cancer) தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது. 

செல்போன்களுக்கும், செல்போன் கோபுரங்களுக்கும் இடையே மின்காந்த அலைகளினால் உருவாகும் எலக்ட்ரோ மேக்னடிக் பீல்ட் எனப்படும் மின்காந்த தளம் தான் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கு காரணம் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 
செல்போனில் பேசும்போது அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு நமது உடலைஊடுருவிச் செல்கிறது. இது சாதாரண கதிர் வீச்சாக இருந்தாலும் எப்போதும் நம் உடலை ஊருவிக்கொண்டே இருப்பதால் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
80 சதவீத மக்கள் செல்போனை தங்களது அருகிலேயே வைத்துளனர். அதிலும் அதிகமானோர் கைகளில் அல்லது உடைகளில் வைத்திருக்கிறார்கள். செல்போன் ஆன் செய்து வைத்திருக்கும் போது கதிர்வீச்சை வெளியிட்டுக் கொண்டே இருக்கும் என்பதால் நமது உடல் கதிர்வீச்சுக்கு இலக்காகிறது. சிக்னல் சரியாக கிடைக்காத செல்போனை பயன்படுத்தும்போது அதில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சின் அளவு அதிகமாக இருப்பதாக இந்நிறுவனம் ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளது.
மேலும் இவ்வறிக்கையில் செல்போன் கோபுரத்தை சுற்றி 300மீட்டர் சுற்றளவில் வசிப்பவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது என கூறுகிறது. 
குழந்தைகளின் மண்டையோடு மிகவும் மென்மையானது. இதனால் குழந்தைகள் செல்போனை பயன்படுத்தும் போது பெரியவர்களை விட அதிக பாதிப்புள்ளாகிறார்கள். 
இந்நிறுவனம் கம்பியுடைய இண்டர்நெட் இணைப்பை பயன்படுத்தவும், பள்ளி குழந்தைகள் மொபைல் போனை பயன்படுத்துவதற்கு முக்கிய கட்டுப்பாடுகளை விதிகளை விதிக்கவும் சிபாரிசு செய்துள்ளது.