டெஸ்க் டாப் ஐகான் நீங்கள் விரும்பிய இடத்தி்ல் அமைக்க...

Windows XP தொகுப்பில் டெஸ்க் டாப்பில் உள்ள ஐகான் ஒன்றை இழுத்துச் சென்று ஓர் இடத்தில் வைத்திட எண்ணி மவுஸால் இழுத்துவிடடால் அது நீங்கள் விடும் இடத்தில் சரியாக அமராது. ஏற்கனவே உள்ள ஐகான்களுக்கு வல இடது பக்கம் மற்றும் மேல் கீழாகச் சரியான வரிசையில் இணையாகத் தன்னை அமைத்துக் கொள்ளும் அப்படி ஏன் வேண்டும்? நான் விடும் இடத்தில் தான் அப்படியே அமர வேண்டும் என எண்ணினால் கீழே குறிப்பிட்டுள்ளபடி செட் செய்திடவும்.
டெஸ்க் டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் "Arrange Icons By" மெனுவில் என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும் இதில் "Align to Grid" என்ற பிரிவினைப் பார்க்கலாம். இப்போது உங்கள் விருப்பப்படி இருக்க வேண்டுமா? அல்லது எக்ஸ்பி சிஸ்டம் படி இயங்க வேண்டுமா என்பதனை முடிவு செய்து அதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்துங்கள் அல்லது எடுத்துவிடுங்கள். இதே போல் Auto Arrange என்பதையும் டிக் செய்து பாருங்கள் .