செல்போனில் மணிகணக்காக பேசுபவரா நீங்கள்?செல்போன் பயன்படுத்துவதால் glioma மற்றும் acoustic neuroma ஆகிய புற்றுநோய்கள் ஏற்படுகின்றன. 40 சதவீதம் glioma புற்றுநோய் ஏற்பட அதிக செல்போன் பயன்பாடு கொண்டவர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது என ஐ.ஏ.ஆர்.சி. என்னும் உலக சுகாதார அமைப்பின் ஒரு அங்கமான சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி மையம் (IARC- International Agency for Research on Cancer) தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது. 

பிளாக்கின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க...

பிளாக்கின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இன்ட்லி (tamilish) tamil10, tamilnanam, Tamilveli, Ulavu, Newspannai போன்ற வெப்சைட்டில் நமது பிளாக்கின் பதிவுகளை பதிவு செய்து வருகிறோம். அதற்காக ஒவ்வொரு வெப்சைட்டும் ஒரு ஓட்டளிப்பு பட்டையின் எச்.டி.எம்.எல்லை வழங்கின்றது. ஆனால் நமது பிளாக்கில் அனைத்து ஒட்டளிப்பு பட்டைகையும் வைத்திருப்பது சாத்திமில்லை. ஒவ்வொரு திரட்டிக்கும் சென்று பதிவு செய்து வர ஒவ்வொரு திரட்டியின் தளத்திற்கும் சென்று வரவேண்டும். இனி அந்த கவலையில்லை.
http://www.valaipathivagam.com தளத்திற்குச் செல்லுங்கள். இன்ட்லி, தமிழ்மணம், தமிழ்வெளி, உலவு, தமிழ்10, திரட்டி, வலைப்பூக்கள் என மொத்தம் 16 திரட்டிகளும் இந்த தளத்தில் உள்ளது. இந்த தளத்திலிருந்து அனைத்து திரட்டிகளிலும் உங்களது பிளாக்கின் பதிவினை பதிவு செய்யலாம். இந்த பதிவை கூட இந்த தளத்தில் இருந்து தான் பதிவு செய்தேன்.

Pen Drive வில் Virus வராமல் தடுக்க...

உங்கள் Pen Drive ஐ Computer ல் இணைக்கவும்
திரையில் (Desktop) Autorun.txt என்ற டெக்ஸ் டாக்குமெண்டை (Text Doument) புதியதாக உருவாக்கவும்
அதை காப்பி செய்து உங்கள் பென்டிரைவ் போல்டருக்குள் போடவும்.
பின்னர் அந்த டாக்குமெண்டை ரைட் கிளிக் செய்து அதன் பிராபர்டிஸ் (Properties) பகுதிக்குச்செல்லவும்

அதில் General Properties என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்
Hidden, Read Only, Archive என்ற மூன்று ஆப்ஷன்கள் இருக்கும். அதில் Hidden, Read Only என்ற இரண்டு ஆப்ஷன்களை மட்டும் Select செய்து OK என்பதை கிளிக் செய்யவும்.
இப்போது அந்த டாக்குமெண்ட் உங்களுக்கு திரையில் தோன்றாது.
உங்களது Pen Drive வில் எந்த வைரசும் வராமல் இது தவிர்த்துவிடும்

ரீ சைக்கிள் பின் அளவை மாற்ற

விண்டோஸ் சிஸ்டத்துடன் வரும் ரீ சைக்கிள் பின் செட் செய்த அளவிலேயே கிடைக்கிறது. சிஸ்டத்தில் அது ஹார்ட் டிஸ்க் அளவில் ஏறத்தாழ 10 சதவீதமாக உள்ளது இந்த இடம் அதற்கென்று ஒதுக்கப்படுகிறது. நீங்கள் விரும்பினால் இதனை குறைக்கலாம். அல்லது அதிகப்படுத்தலாம். ஆனால் சற்று கூடுதலாக இருப்பது நல்லதுதான். ஏனென்றால் நம்மை அறியாமலேயே பெரிய பைல் ஒன்றை அழித்துவிட்டால் ரீ சைக்கிள் பின்னில் அதிக இடம் இருந்தால் தானே அது அங்கு சென்று அமரும். பின்னால் நாம் மீண்டும் எடுத்துப்பயன்படுத்த உதவும்.
இதனை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். ரீசைக்கிள் பின் ஐகானில் முதலில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் ப்ராபர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். திரையின் நடுவில் உள்ள ஸ்லைடர் பாரினை அட்ஐஸ்ட் செய்தால் ரீ சைக்கிள்ம பின்னின் அளவு உயரும் அல்லது குறையும். இதனை முடிவு செய்த பின் ஒ.கே கிளிக் செய்து வெளியேறினால் நீங்கள் அமைத்தப்படி அளவில் ரீசைக்கிள் பின் அமையும். இந்த புதிய அளவு மீண்டும் கம்ப்யூட்டரை பூட் செய்திடும் போது மட்டுமே அமலுக்கு வரும்.

டெஸ்க் டாப் ஐகான் நீங்கள் விரும்பிய இடத்தி்ல் அமைக்க...

Windows XP தொகுப்பில் டெஸ்க் டாப்பில் உள்ள ஐகான் ஒன்றை இழுத்துச் சென்று ஓர் இடத்தில் வைத்திட எண்ணி மவுஸால் இழுத்துவிடடால் அது நீங்கள் விடும் இடத்தில் சரியாக அமராது. ஏற்கனவே உள்ள ஐகான்களுக்கு வல இடது பக்கம் மற்றும் மேல் கீழாகச் சரியான வரிசையில் இணையாகத் தன்னை அமைத்துக் கொள்ளும் அப்படி ஏன் வேண்டும்? நான் விடும் இடத்தில் தான் அப்படியே அமர வேண்டும் என எண்ணினால் கீழே குறிப்பிட்டுள்ளபடி செட் செய்திடவும்.
டெஸ்க் டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் "Arrange Icons By" மெனுவில் என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும் இதில் "Align to Grid" என்ற பிரிவினைப் பார்க்கலாம். இப்போது உங்கள் விருப்பப்படி இருக்க வேண்டுமா? அல்லது எக்ஸ்பி சிஸ்டம் படி இயங்க வேண்டுமா என்பதனை முடிவு செய்து அதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்துங்கள் அல்லது எடுத்துவிடுங்கள். இதே போல் Auto Arrange என்பதையும் டிக் செய்து பாருங்கள் .

ஆங்கில மொழி அறிவை வளர்க்க ஒர் இணையதளம்

ஆங்கில மொழியில் உங்களுக்கு எத்தனை சொற்கள் தெரியும்? அவற்றின் சரியான பொருள் உடனடியாகச் சொல்ல முடியுமா?
நீங்கள் மாணவரா? பெற்றோரா? ஆசிரியரா? மாணவராய் இல்லை என்றால் கற்கும் மாணவர்களுக்கு எப்படி உதவ முடியும்? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் தருகிறது http://www.verbalearn.com என்ற முகவரியில் உள்ள இணையதளம்.

முதலில் சொற்கள் குறித்த உங்கள் அறிவை வளர்க்கும் வகையில் பல சோதனைத் தேர்வுகளை இது நடத்துகிறது. உங்கள் பதில் சரியா, இல்லையா என்று சொல்லி விளக்கமும் அளிக்கிறது.
பல வகைகளில் உங்கள் ஆங்கில அறிவை வளர்க்கும் இந்த தளம் மாணவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமான ஒரு தளமாகும்.
இந்த சேவை அனைத்தும் நமக்கு­­ இலவசமாக கிடைக்கிறது என்பது இன்னொரு சிறப்பு.