தெரியுமா உங்களுக்கு?

1. இணைய இணைப்பின் வேகம்  8Mb/secஎன்று சொன்னால், அது வினாடிக்கு 8 மெகா பிட்ஸ் என்று பொருள். மெகா பைட்ஸ் அல்ல.
2.“Start Me Up” என்ற புகழ் பெற்ற ஆங்கில இசைப்பாடல் விண்டோஸ் 95 தொகுப்பின் விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்டது.
3. பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றின் முதலுதவிப் பெட்டியில் எமர்ஜென்ஸி பூட் சிடி அல்லது பிளாஷ் ட்ரைவ் இருக்க வேண்டும்.
4. அடுத்தடுத்து வேகமாக டைப் செய்கையில் தொடர்ந்து இருக்கும் கீகள் இணைந்து ஜாம் ஆகி நின்றுவிடக் கூடாது என்பதால் தான், கம்ப்யூட்டர் கீ போர்டாக குவெர்ட்டி கீ போர்டு எடுத்துக் கொள்ளப்பட்டது.
5. உங்கள் லேப்டாப் மீது தண்ணீர், காப்பி,டீ, கூல் ட்ரிங்க்ஸ் என ஏதாவது திரவும் கொட்டிவிட்டால், உடனே மின்சக்தி வரும் ப்ளக்கினை எடுத்து மின்சக்தியை நிறுத்தவும். அல்லது பேட்டரியினை வெளியே இழுக்கவும்.
6. லேப்டாப்பின் பேட்டரி திறனை நீண்ட நாள் பாதுகாப்பாகப் பெற, திரையின் வெளிச்சத்தைக் குறைப்பது நல்லது.
7. கம்ப்யூட்டர் கேம்ஸ்களில், மிக அதிகமாக விற்பனை செய்யப்பட்டது The Sims  என்ற கேம்.
8. உங்களையும் அறியாமல், உங்களிடம் உள்ள ஒரே நகல் உள்ள ஒரு கோப்பினைக் கம்ப்யூட்டரிலிருந்து அழித்துவிட்டால், உடனே ரெகுவா போன்ற, கோப்பு மீட்டுத் தரும் அப்ளிகேஷன் புரோகிராமினைப் பயன்படுத்த வேண்டும். எனவே இதனை உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைப்பது நல்லது.
9.ஒரு பிரிண்டரை வெகுநாள் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என நீங்கள் திட்டமிட்டால், பிரிண்டரை வாங்கும் முன், ஒரு பக்கம் அதில் அச்சடிக்க எவ்வளவு செலவாகும் என்பதனையும்  கணக்கிட்டுப் பார்க்கவும்.
10. “Hotswapping” என்பது, கம்ப்யூட்டருடன் ஒரு சாதனைத்தை இணைத்துப் பயன்படுத்திய பின்னர், கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திடாமல் அல்லது ரீபூட் செய்திடாமல், இணைப்பை நீக்குவதனைக் குறிக்கும்.
11. அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றினை, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்த பின், சிஸ்டம் முடங்கினாலோ, மிக மெதுவாக இயங்கினாலோ, உடனே சிஸ்டம் ரெஸ்டோர் பாய்ண்ட் மூலம், அந்த அப்ளிகேஷன் பதிந்த நாளுக்கு முன்னர் இருந்த நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு வருவதுதான் சிறந்த வழியாகும்.
12. ஒரு பிழைச் செய்தியைக் காட்டிய பின்னர், கம்ப்யூட்டர் முடங்கிப் போனால், அதற்கான தொழில் நுட்ப வல்லுனரை அழைக்கும் முன், அந்த பிழைச் செய்தி என்ன என்று குறித்து வைத்துக் கொள்வது சிறந்த வழி முறையாகும்.  முடியுமானால், அதனை செலக்ட் செய்து காப்பி செய்து, ஒரு டெக்ஸ்ட் பைலில் பேஸ்ட் செய்திடலாம்.  இயலாவிட்டால், அதனைப் பார்த்து எழுதிக் கொள்ளலாம். அதுவும் முடியாவிட்டால், அப்படியே அந்த பிழைச் செய்திக்கான திரையை, ஒரு இமேஜாக சேவ் செய்து, பின்னர் அதனைத் திறந்து அதில் இருப்பதைப் பார்த்து, டெக்ஸ்ட்  பைலாக சேவ் செய்து வைக்கலாம்.
13.  FAT16, FAT32, மற்றும் NTFS ஆகியவை வெவ்வேறு வகையான பைல் கட்டமைப்புகளாகும்.
14. விண்டோஸ் என்.டி. (Windows NT)  யில் உள்ள என். டி. என்பது New Technology  என்ற சொற்களைக் குறிக்கிறது.
15. 1977 ஆம் ஆண்டு,பில் கேட்ஸ் ஒருமுறை, மிக வேகமாகக் காரை ஓட்டியதற்காகக் கைது செய்யப்பட்டார்.
16. விண்டோஸ் எக்ஸ்பியின் திரைத் தோற்றத்தில் மாற்றப்படா நிலையில் மிகப் பெரிய பச்சைப் புல்வெளி மேடும், பின்னணியில் மலையும் உள்ளதல்லவா? இதனை விண்டோஸ் பிளிஸ் (Bliss)  எனப் பெயரிட்டுள்ளது. இந்த அழகான காட்சியைப் போட்டோவாக எடுத்தவர் பெயர் சார்ல்ஸ் ஓ ரியர்  (Charles O’Rear). கலிபோர்னியாவில் சொனாமா கவுண்ட்டி என்ற இடத்தில் இந்த போட்டோ எடுக்கப்பட்டது. இதனைப் பின்னர் மைக்ரோசாப்ட் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி, தன் எக்ஸ்பி சிஸ்டத்தில் மாறா நிலையில் உள்ள டெஸ்க்டாப் இமேஜாகப் பயன்படுத்தியது.

இலவச எழுத்துக்கள் தரும் இணைய தளங்கள்

நீங்கள் கம்ப்யூட்டரில் பணிபுரியும் டிசைனர் என்றால் நிச்சயமாக உங்கள் வேர்ட் ப்ராசசர், டி.டி.பி. சாப்ட்வேர் மற்றும் பிற தளங்கள் தரும் எழுத்து வகைகள், உங்கள் கற்பனைத் திறனுக்கு ஈடு கொடுக்க முடியாது.  ஆனால் இணையத்தில் இலவசமாக எழுத்து வகைகளைத் தரும் தளங்கள் நிறைய உள்ளன. ஒரு சில தளங்களில் கட்டணம் செலுத்தியே சில எழுத்துவகைகளைப் பெற முடியும். பெரும்பாலான தளங்கள் விண்டோஸ் சிஸ்டத்துடன் மற்ற  மேக் மற்றும் லினக்ஸ் தளங்களில் பயன்படுத்தும் எழுத்துவகைகளையும்  தருகின்றன.  இவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1.www.fawnt.com :  இந்த தளம் 9348 எழுத்து வகைகளுக்கான கோப்புகளைக் கொண்டுள்ளது. டிசைனர், டெவலப்பர்கள் மற்றும் இணையப் பக்கங்கள் அழகாக அமைய வேண்டும் என விரும்புபவர்கள் இந்த தளம் சென்று எழுத்து வகைகளைப் பெறலாம்.
2.www.abstractfonts.com :  இதில் 11,849 எழுத்து கோப்புகள் உள்ளன. நம் தேவைக்கேற்ப எழுத்து வகைகளைத் தேடுவதற்கு நல்ல யூசர் இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது.
3. www.freefonts.co.in : இந்திய இணைய தளம். இதில் 12,000க்கு மேற்பட்ட எழுத்துவகைக் கோப்புகள், அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கும் தரப்பட்டுள்ளன.
4. www.dafont.com :  இதில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்துவகைகள் கிடைக்கின்றன. அனைத்தும் இலவசமே. எளிதாகத் தேடி அறிந்து எடுத்துக் கொள்ள சிறப்பாக வழி காட்டும் மெனு உள்ளது.
5. : ஏறத்தாழ 8,000 எழுத்து வகைக் கோப்புகளுக்கும் மேலாக இதில் கிடைக்கின்றன. அனைத்தும் சரியான முறையில் பிரித்து வைத்துக் காட்டப்படுகின்றன. அகரவரிசைப்படியும் இவற்றை பிரவுஸ் செய்து தேர்ந்தெடுத்து டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
6. www.free–fonts.Com : இது 3ல் காட்டப்பட்டுள்ள தளம் அல்ல. முகவரியினை நன்கு கவனிக்கவும். இது எழுத்துவகை கோப்புகளுக்கு ஒரு தேடல் சாதனம் போலச் செயல்படுகிறது. இதன் தகவல் கிடங்கில் 55 ஆயிரம் எழுத்துவகைகளுக்கு மேல் காட்டப்படுகிறது. ஆனால் பிரவுஸ் செய்து பெற முடியவில்லை. எழுத்து வகையின் பெயரை நினைவில் வைத்துத் தேட வேண்டும்.
7.http://simplythebest.net/fonts/: ஆயிரக்கணக்கில் எழுத்துவகை கோப்புகளைக் கொண்டு, அவற்றைத் தரம் மற்றும் வகை பிரித்துக் காட்டுகிறது. ஒவ்வொரு எழுத்துவகையும் இலவசமா இல்லையா என்று முதலிலேயே காட்டப்படுகிறது.  மேலே கூறப்பட்ட தளங்களிலிருந்து எழுத்து வகைக்கான கோப்புகளை இறக்கி, அவை சுருக்கப்பட்ட ஸிப் பைல்களாக இருந்தால், அவற்றை விரித்துப் பின் பாண்ட்ஸ் போல்டரில் இன்ஸ்டால் செய்திட வேண்டும்.

திரையில் கீ போர்ட்

பல வேளைகளில் கம்ப்யூட்டருடன் இணைக்கப் பட்டுள்ள கீ போர்டில் டைப் செய்வது ஆபத்தில் முடிகிறது. நீங்கள் என்ன டைப் செய்கிறீர்கள் என்பதனை, நீங்கள் அழுத்தும் கீகளை வரிசையாகப் பெற்று அறிவிக்கும் கீ லாக்கர்கள் புரோகிராம் கள், இணையத்தில் நிறைய கிடைக் கின்றன. இதனைக் கம்ப்யூட்டர்களில் பதிந்து வைத்தால், ஒருவர் டைப் செய்திடும் இமெயில் முகவரி, பாஸ்வேர்ட், வங்கி அக்கவுண்ட் தகவல்களைப் பெற்று, திருட்டுத் தனமாக அவற்றைப் பயன்படுத்த முடியும். மேலும் பல ஸ்பைவேர் புரோகிராம்கள் இது போல கீ போர்டில் அழுத்தப்படும் கீகளை அறியும் நோக்கத்துடனேயே தயார் செய்யப் பட்டு, நம்மை அறியாமலேயே நம் கம்ப்யூட்டர்களில் பதிக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் நம் தகவல்களை அந்த புரோகிராம்கள் அனுப்பி யவர்களின் கம்ப்யூட்டருக்குச் செல்லும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. என்னதான் நாம் ஆண்ட்டி வைரஸ், பயர்வால், ஸ்பைவேர் புரோகிராம்களை பதித்து வைத்து இயக்கினாலும், அவற்றையும் மீறிக் கொண்டு இந்த ஸ்பைவேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டருக்குள் நுழைகின்றன.
இதனால் தான் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மற்றும் ரகசிய தகவல்களைக் கையாளும் அமைப்புகள், தங்கள் தளங்களிலேயே விர்ச்சுவல் கீ போர்டு ஒன்றைத் திரையில் தருகின்றன. இந்த விர்ச்சுவல் கீ போர்டு மூலம் நம் யூசர் நேம், பாஸ்வேர்ட் மற்றும் பிறர் அறியக்கூடாத தகவல்களை டைப் செய்திடலாம். இவற்றின் மூலம் டைப் செய்திடுகையில், மேலே குறிப்பிட்ட ஸ்பைவேர் புரோகிராம்கள், கீ அழுத்தங்களைப் பின்பற்ற முடியாது.   அப்படி எனில், நமக்கு நிரந்தரமாக ஒரு விர்ச்சுவல் கீ போர்டினை வைத்துக் கொள்ள முடியுமா என்று நாம் எதிர்பார்க்கலாம்.  அப்படி ஒரு விர்ச்சுவல் கீ போர்ட், யூசர் ஸ்கிரிப்ட் விர்ச்சுவல் கீ போர்ட் (UserScript Virtual Keyboard) என்ற  பெயரில் கிடைக்கிறது. திரையில் வைத்து இதனை மிக வேகமாகவும் எளிதாகவும் இயக்க முடிகிறது. தற்போதைக்கு டெக்ஸ்ட் பீல்ட், பாஸ்வேர்ட் பீல்ட், சார்ந்த டெக்ஸ்ட் ஏரியா ஆகியவற்றில் இதன் மூலம் சொற்களை அமைக்க முடிகிறது. பிரவுசர்களில் முகவரிகளை இதனைக் கொண்டு அமைக்க முடியாது. இதனை பதிந்துவிட்டு, இணைய தளம் ஒன்றில் மேலே குறிப்பிட்ட பீல்டுகளில் கர்சரைக் கொண்டு சென்று மூன்று முறை கிளிக் செய்தால், இந்த விர்ச்சுவல் கீ  போர்டு கிடைக்கிறது.  டெக்ஸ்ட் பீல்டுக்குக் கீழாகவே இது காட்டப்படுகிறது. அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி அல்லது ஜப்பானியர்கள் பயன்படுத்தும் வெவ்வேறு கீ போர்டுகளின் வடிவமைப்புகள் இதில் கிடைக்கின்றன. தேவையானதைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்களில் இது இயங்குகிறது.    இதனைப் பெற http://userscripts.org/scripts/show/10974 என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

கம்ப்யூட்டருக்கு புதியவரா! (மானிட்டர் பிரச்னை)

மானிட்டர் பிரச்னை
கம்ப்யூட்டர் சரியாக இயங்கினாலும், மானிட்டர் தகராறு செய்தால் நம் கதி அதோ கதி தான். அவசரமாகப் பணியாற்ற வேண்டும் என எண்ணுகையில் மானிட்டரில் பிரச்னை ஏற்பட்டால் நமக்கு எரிச்சல் ஏற்படுவதுடன், பொறுமையிழந்து என்ன செய்வது எனத் தெரியாமல் பதட்டமடைவோம். மற்ற துணை சாதனங்களில் பழுது ஏற்பட்டால் அவற்றிற்குப் பதிலாக இன்னொரு சாதனத்தைப் புதிதாகவோ அல்லது கடனாகவோ பெற்று அப்போதைக்கு நம் கம்ப்யூட்டர் பணியை முடிக்கலாம். மவுஸ், கீ போர்டு, ஸ்பீக்கர், ஏன் சிடி மற்றும் பிளாப்பி டிரைவ் கூட உபரியாக வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்; அல்லது பழைய கம்ப்யூட்டரில் இருந்து கழட்டி வைத்ததைக் கொண்டு இயங்கலாம். ஆனால் மானிட்டரில் பிரச்னை ஏற்ட்டால் அது இயலாது. உபரியாக ஒன்று வைத்துக் கொள்ள முடியாது; ஏனென்றால் இடம், விலை நமக்குக் கட்டுபடியாகாது. மற்றவரிடமிருந்து இரவல் வாங்குவதிலும் சிக்கல் ஏற்படும். எனவே மானிட்டரில் பிரச்னை ஏற்பட்டால் அதனைப் பொறுமையாக என்ன பிரச்னை என அலசிப் பார்ப்பதே சிறந்தது. அதற்கான சில வழிகளை இங்கு பார்ப்போம்.
உங்கள் கம்ப்யூட்டர் நன்றாக இயங்கி மானிட்டரில் எந்த சிக்னலும் வரவில்லை என்றால் கீழ்க்கண்டபடி அதனை ஆய்வு செய்யவும். ஆனால் அதில் எங்கு பிரச்னை என்று உங்களுக்குச் சரியாகத் தெரியும் என்றால் நேராக அதனைச் சரி செய்திடும் வழிக்கே சென்று விடலாம்.
1. முதலில் மானிட்டருக்குச் செல்லும் மின்சாரம் இயக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். மிகவும் பழைய கம்ப்யூட்டர் மற்றும் மானிட்டராக இருந்தால் கம்ப்யூட்டரின் சிபியூவில் இருந்தே மானிட்டருக்கு பவர் கேபிள் செல்லும். இது சரியாகப் பொருந்தி உள்ளதா என்று பார்க்க வேண்டும். எதற்கும் ஒரு முறை எடுத்து மீண்டும் சரியாகப் பொருத்திதிப் பார்ப்பதே நல்லது. தற்போதைய மானிட்டர் எனில், அதற்கு தனியே பவர் லைன் பிளக் கார்ட் இருக்கும். அது சரியானபடி பவர் பிளக் சாக்கெட்டில் பொருத்தப்பட்டிருக்கிறதா எனப் பார்க்கவும். அந்த பிளக்கிற்குத் தனியான ஸ்விட்ச் இருந்தால் அது ஆன் செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். மானிட்டருக்கு மின்சாரம் செல்கிறது, அது ஆன் செய்யப்பட்டிருக்கிறது என்பதனை அறிந்து கொள்ள, ஒரு சிறிய எல்.இ.டி. லைட் இருக்கும். இது மெலிதான ஆரஞ்ச் நிறத்தில் இருந்தால் மானிட்டருக்கு மின்சாரம் செல்கிறது, ஆனால் கம்ப்யூட்டரின் சிபியூவிலிருந்து சிக்னல் வரவில்லை என்று பொருள்.
2. அடுத்ததாக உங்கள் மானிட்டரில் டிவியில் பிரைட்னஸ் மற்றும் காண்ட்ராஸ்ட் அட்ஜஸ்ட் செய்வதற்கான ஸ்விட்ச் கண்ட்ரோல் கொடுத்திருப்பார்கள். இதனை அட்ஜஸ்ட் செய்து பார்க்கவும். சில வேளைகளில் நாம் இல்லாத போது குழந்தைகள் இந்த கண்ட்ரோல் ஸ்விட்சுகளை அழுத்தி மாற்றி வைத்திருப்பார்கள். எனவே இவற்றை அட்ஜஸ்ட் செய்தால் மானிட்டர் சரியாகலாம்.
3. அடுத்ததாக மானிட்டருக்கு வரும் விடியோ கேபிளைச் சரி செய்து பார்க்கவும். அது சரியான முறையில் பொருத்தப்பட்டிருக்கிறதா எனப் பார்த்து மீண்டும் ஒரு முறை கழட்டி மாட்டவும்.
4. இன்னொரு மானிட்டர் கிடைத்தால் அல்லது வீட்டில் இருந்தால், அதனை இந்த சிபியூவில் மாட்டிப் பார்க்கவும். விடியோ கேபிள் பழையதையே மாட்டவும். இப்போதும் சரியாகக் காட்சி கிடைக்கவில்லை என்றால் விடியோ கேபிள் சரியில்லை என்று பொருள். இந்த கேபிளை மாற்றிப் பார்க்கலாம்.
5. முடியுமென்றால், சந்தேகத்திற்குரிய மானிட்டரை இன்னொரு கம்ப்யூட்டரில் பொருத்திப் பார்க்கவும். அப்படியும் மானிட்டர் வேலை செய்திடவில்லை என்றால் மானிட்டரில்தான் கோளாறு இருக்கிறது என்பது உறுதியாகிறது. கம்ப்யூட்டரில் பிரச்னை இல்லை என்றும் தெரிகிறது. இந்நிலையில் உங்கள் மானிட்டருக்குப் பதிலாகப் புதிய மானிட்டர் வாங்கிப் பொருத்த வேண்டும். அல்லது நல்ல டெக்னீஷியனாகப் பார்த்து மானிட்டரை ரிப்பேர் செய்திட வேண்டும்.
6. இன்னும் சில வழிகளில் மானிட்டர் இயங்காமல் காட்சி அளிக்கும். கம்ப்யூட்டர் பூட் ஆகும் போதும் பின்னர் காட்சி கிடைக்கும் போதும் தெளிவான காட்சி இல்லாமல் கன்னா பின்னா என்று தெரியும். இப்படி குழப்பமான காட்சி இருந்தால் உங்களுடைய டிஸ்பிளே கார்ட் சரியில்லை என்று பொருள். இதனை மாற்றிப் பாருங்கள். மாற்றப்பட்ட கார்டுடன் காட்சி தெளிவாக இருந்தால் பழைய டிஸ்பிளே கார்ட் பழுதாகிவிட்டது என்று பொருள். அதனை அப்படியே தூக்கி எறிய வேண்டியதுதான். புதிய டிஸ்பிளே கார்டுக்கும் மானிட்டர் சரிப்பட்டு வரவில்லை என்றால் மானிட்டரை மாற்றுங்கள்; அல்லது ரிப்பேர் செய்திடுங்கள். புதியது வாங்குவது என முடிவு எடுத்துவிட்டால் செகண்ட் ஹேண்ட் மானிட்டரை வாங்க வேண்டாம். அதே போல் புதிய மானிட்டரை வாங்குகையில் அன்றைய நிலையில் அறிமுகமாகி உள்ள தொழில் நுட்பத்தின் அடிப்படையிலான மானிட்டரை வாங்குங்கள். எடுத்துக்காட்டாக தற்போது தட்டையான எல்.சி.டி. மானிட்டர்கள் குறைவான விலையில் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றை வாங்கவும்.

sell structured Insurance settlements – 46.53
54. College Loan Consolidation – 46.49
55. dui attorney sacramento – 46.48
56. car insurance quotes – 46.47
57. Philadelphia personal injury lawyers – 46.37
58. Remortgaging – 46.20
59. irs tax attorney – 46.19
60. Consolidation Student Loan – 46.18
61. buyer Structured Settlement – 46.17
62. california mesotheloma attorney – 46.14
63. home mortgages for bad credit – 46.02
64. selling structured settlements – 45.96
5. phoenix dui lawyers – 45.90
66. sell structured settlement payments – 45.72

இந்திய ரூபாய்கான குறியீட்டு FONT

அமெரிக்க டாலர், இங்கிலாந்து நாட்டின் பவுண்ட், யூரோ, யென் ஆகிய கரன்சிகளுக்குத் தனி அடையாளம் இருப்பதைப் போல, இந்திய ரூபாய்க்கும் தனி அடையாளம் வேண்டுமென வெகு நாட்களுக்கு முன்பே அரசு எண்ணியது. அதனை வடிவமப் பதற்கான போட்டி நடத்தி, இறுதியில் தமிழகப் பொறியாளர் வடிவமைத்த அடையாளத்தினை அரசு ஏற்றுக் கொண்டது.
இந்த அடையாளம், கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்பாட்டிற்கு, அதிகாரப் பூர்வமாக வருவதற்குச் சில மாதங்கள் ஆகும். இந்திய அரசு, இது குறித்து, யூனிகோட் அமைப்பிற்கு எழுதி, அந்த அமைப்பு இதற்கென ஒரு ஸ்லாட் ஒன்றைத் தன் யூனிகோட் பாண்ட் பைலில் ஒதுக்கிய பின்னரே, அனைத்து கம்ப்யூட்டர்களிலும் இது கிடைக்கத் தொடங்கும்.
அதுவரை என்ன செய்திடலாம்? இந்த அடையாளத்தினை கம்ப்யூட்டரில் எப்படி அமைப்பது? இதற்கான பாண்ட் பைலை போரோடியன் (Foradian) என்னும் நிறுவனம் தன் இணையதளத்தில் தந்துள்ளது. இதனை இலவசமாகவும் வழங்குகிறது. இதன் தளத்திலிருந்து, இந்த பாண்ட் பைலை இறக்கி, விண்டோஸ் போல்டரில் உள்ள பான்ட்ஸ் போல்டரில் இதனைப் பதிந்து கொண்டால் போதும். பின்னர் இந்த அடையாளத்தினை அமைக்க, முதலில் இந்த பாண்ட் வகையை, வேர்ட் ப்ராசசரில் தேர்ந்தெடுக்க வேண்டும். எழுத்துவகை பைலின் பெயர் ருபி போரோடியன் (Rupee Foradian)  கீ போர்டில் இடது மேல் மூலையில், எண் 1க்கான கீ முன் உள்ள கீயில் இது தரப்பட்டுள்ளது. இந்த கீயை அழுத்தினால், இந்த ரூபாய் அடையாளம் டைப் செய்யப்படும். இந்த பாண்டில் மற்ற ஆங்கில எழுத்துக்களையும் தட்டச்சு செய்திடலாம்.
இந்த பைலை டவுண்லோட் செய்திட நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி: http://blog.foradian.com/?c=1

பேஸ்புக்‌கில் மலர்ந்த நட்பு கற்பழிப்பில் முடிந்த கொடுமை

பேஸ்புக்கில் புகுந்து விளையாடுபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பேஸ்புக் பற்றிய அதிர்ச்சித் தகவல்களும் சம அளவில் வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன. பலர் தங்கள் பணிகளை மறந்து கூட பேஸ்புக்கில் மூழ்கி விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. மும்பையில் கல்லூரி மாணவி ஒருவர் பேஸ்புக்கில் விரிக்கப்பட்ட வலையில் சிக்கி கற்பிழந்து கண்ணீருடன் தவித்து நிற்கிறாள். மும்பை கிழக்கு செம்பூர் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி, சும்மா பேஸ்புக்கில் நட்பு வளர்த்துள்ளார். எதிரே வலை விரித்த இளைஞனுக்கோ எண்ணம் வேறாக இருந்தது. தினமும் பேஸ்புக்கில் சாட் செய்த இருவரும், ஒரு நாள் பாட விஷயமாக கருத்துக்களை பறிமாறிக்கொள்ள நேரில் சந்தித்தனர். அதன் விளைவு, ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அந்த இளைஞன், இளம் பெண்ணை கற்பழித்தான். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெற்றோரும், உற்றாரும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்த இளைஞர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்டெர்நெட் வசதிகளை தவறாக பயன்படுத்துவதால் இன்றைய இளசுகள் இடம் தெரியாமல் போகிறார்கள்.

TNPSC போட்டி தேர்வு எழுதப்போகிறீர்களா?


போட்டி தேர்வு எழுது அனைவருக்கும் வழங்கப்படும் முதல் அறிவுரை 5ம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான புத்தகங்களை படியுங்கள் என்பது தான். இதெல்லாம் எனக்கு தெரியும். புத்தகங்களுக்கு எங்கே போவது? அவ்வளவு புத்தகங்கள் என்னிடம் வசதியில்லையே? எல்லா புத்தகமும் வாங்கிவிட்டேன், ஆனால் குறிப்பிட்ட இந்த வகுப்பு இந்த புத்தகம் மட்டும் கிடைக்கவில்லையே? இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கேள்விகள் குழப்பங்கள். இனி அந்த கவலை வேண்டாம். http://www.textbooksonline.tn.nic.in/ இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள். 1ம் வகுப்பு முதல் 12வகுப்பு வரையிலான அனைத்து வகுப்பு பாடநூல்களும் Pdf வடிவில் கிடைக்கும். தமிழ், ஆங்கிலம், உருது, கன்னடம், தெலுங்கு, மலையாள மீடியத்தில் கிடைப்பது இதன் சிறப்பு. இது மட்டும் இல்லாது D.T.Ed. வகுப்பு பாட புத்தகமும் இங்கு Pdf வடிவில் கிடைக்கிறது. இனி மகிழ்ச்சிதானே!
நன்கு படியுங்கள்! தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

TNPSC போட்டி தேர்வு எழுதப்போகிறீர்களா?


போட்டி தேர்வு எழுது அனைவருக்கும் வழங்கப்படும் முதல் அறிவுரை 5ம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான புத்தகங்களை படியுங்கள் என்பது தான். இதெல்லாம் எனக்கு தெரியும். புத்தகங்களுக்கு எங்கே போவது? அவ்வளவு புத்தகங்கள் என்னிடம் வசதியில்லையே? எல்லா புத்தகமும் வாங்கிவிட்டேன், ஆனால் குறிப்பிட்ட இந்த வகுப்பு இந்த புத்தகம் மட்டும் கிடைக்கவில்லையே? இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கேள்விகள் குழப்பங்கள். இனி அந்த கவலை வேண்டாம். http://www.textbooksonline.tn.nic.in/ இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள். 1ம் வகுப்பு முதல் 12வகுப்பு வரையிலான அனைத்து வகுப்பு பாடநூல்களும் Pdf வடிவில் கிடைக்கும். தமிழ், ஆங்கிலம், உருது, கன்னடம், தெலுங்கு, மலையாள மீடியத்தில் கிடைப்பது இதன் சிறப்பு. இது மட்டும் இல்லாது D.T.Ed. வகுப்பு பாட புத்தகமும் இங்கு Pdf வடிவில் கிடைக்கிறது. இனி மகிழ்ச்சிதானே!
நன்கு படியுங்கள்! தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

இ-மெயில் படித்தால் பணம்-Rupeemail

ஆம், இந்த தளத்தில் நீங்கள் உறுப்பினராக பதிவு செய்துகொண்டால் இத்தளத்தில் இருந்து உமது மின்னஞ்சல் முகவரிக்கு வாரம் ஓரிரு விளம்பர மின்னஞ்சல்களை அனுப்பிவைப்பார் அவற்றை திறந்து பார்த்தால் உங்களது அக்கௌன்ட்-ல் அந்த விளம்பரத்துக்கான மதிப்பு எவ்வளவோ அவ்வளவு பணம் சேர்ந்திருக்கும். உங்களது நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தாலும் பணம் அளிக்கப்படுகிறது. மொத்தமாக ரூ.200 ஆனதும் நீங்கள் அந்த தொகையை DDயாக பெறலாம். இலவசமாக உறுப்பினாராக இணைய கீழ் காணப்படும் LOGO வை அழுத்தவும்.

தொலைந்து போன பைலை கண்டுபிடிப்பது எப்படி?

Start  பட்டன் அழுத்தி Search என்பதில் கிளிக் செய்தி்டவும். கிடைக்கும் பாக்ஸில் What do you want to search for ? என்று கொடுக்கப்பட்டு்ள்ள பிரிவில் For File or Folders  என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கே Search by any or all of the criteria below என்று காட்டப்பட்டு பல பிரிவுகள் கீழே தரப்படும்.
1. உங்களுக்கு அந்த பைலின் பெயர் தெரியாது. ஆனால் என்ன வகை பைல் என்று தெரியும். அது *.doc, Excel *.xls, Acrobat *.pdf, *.ppt  மற்றும் *.exe  என என்னவாக வேண்டுமானாலும். இருக்கலாம். பைலை முதல் பிரிவில் தரவும்.
2. பெயரும் தெரியவில்லை ; என்ன வகையில் சேவ் செய்தோம் எனவும் தெரியவில்லை. அது *.doc அல்லது *.txt என்பது மறந்துவிட்டது. ஆனால் பைலில் உள்ள ஒரு வாசகம் ஞாபகத்தில் தேடலாம். இதனை இரண்டாவது பிரிவில் தந்து தேடலாம்.
3. மேற்காணும் வகையில் உள்ள பைல்கள் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு குறிப்பிட்ட டிரைவில் தான் உள்ளது. என நீங்கள் உறுதியாக நம்பினால் அந்த டிரைவை மட்டும் கொடுத்து தேடலாம். இதனை Look IN : என்ற பிரிவில் டிரைவ் எழுத்தைத் தந்து தேடலாம். எழுத்தைக் டைப் செய்வதற்குப் பதிலாக அதில் உள்ள சிறிய முக்கோணத்தில் கிளிக் செய்தால் வரிசையாக உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டிரைவ்கள் காட்டப்படும். அதனைத் தேர்ந்தெடுத்தும் தேடலாம்.
4. இதே வரிசையில் மேலும் சில தேடல் வகைகளை இங்கு பார்க்கலாம். குறிப்பிட்ட நாளில் அதனை பயன்படுத்தி இருப்பது நினைவில் இருந்தால் அந்த தேதியைக் கொடுத்தும் தேடலாம்.
இப்படி பல வகைகளில் தேடினால் நிச்சயம் ஒரு வகையில் நமக்கு பைல் கிடைக்கும்.

உடல் எடை குறைய ஓர் இணைய தளம்

உடல் எடையைக் குறைப்பதில் உருப்படியான தகவல்களையும் அறிவுரைகளையும் கூறும் தளம் இது.
இந்த தளம் கிடைக்கும் முகவரி http://www.caloriesperhour.com/ இதில் பல பிரிவுகள்  உள்ளன.
Diet and Weight Loss Tips : உணவு முறைக்கும் எடைக் குறைப்பிற்குமாக உருப்படியான டிப்ஸ்களை இந்தப் பிரிவில் காணலாம். ஒவ்வொரு டிப்ஸும் வெவ்வேறு பழக்கம் குறித்து தகவல்களை அளிக்கின்றன. அத்துடன் அந்த பொருள் குறித்த கட்டுரை ஒன்றுக்கு உங்களை வழி நடத்துகின்றன.
Tutorial : இந்த தளத்தில் உங்கள் உணவுப் பழக்கம் குறித்த முழுமையான தகவல்கள் தரப்படுகின்றன. உணவுக் கட்டுப்பாடு பழக்கம் குறித்த உண்மைத் தகவல்களைச் சொல்லி அழைக்கின்றது.
Calories Burned Calculator : இங்கு ஐந்து வகையான கால்குலேட்டர்கள் தரப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் உங்கள் உடம்பின் சக்தி எவ்வாறு செலவழிக்கப்படுகிறது. என்பதனை அறியலாம். ஒவ்வொரு கால்குலேட்டகளின் கீழாகவும் அதன் தொடர்பான ஒரு கட்டுரை தரப்பட்டுள்ளது. அதில் அந்த கால்குலேட்டர் கையாளும் பொருள் குறித்துத் தெளிவான கருத்துக்களும் செயல் முறைகளும் தரப்பட்டுள்ளன.
Food Calories & Nutrition Calculator : இந்த கால்குலேட்டர் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவினால் உடம்பில் சேரும் சக்தி கலோரிகளில் தரப்படுகிறது. குறிப்பாக பாஸ்ட் புட் சூடாக்கிச் சாப்பிடும் வகைகள் குறித்த தகவல்கள் நமக்கு மிகவும் உபயோகமானவை.
Weight Loss Calculator : இந்த பிரிவில் உள்ள கால்குலேட்டர் எடையைக் குறைப்பதில் உங்கள் இலக்கு மற்றும் எடையைக் குறைப்பதற்கான கால அட்டவணையைத் தயாரித்து அளி்க்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நீங்கள் இழக்கும் எடை மற்றும் அதனை ஈடுகட்ட நீ்ங்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகளையும் சுட்டிக் காட்டுகிறது.
Weight Loss Forums : இங்கு உங்களைப் போல உடல் குறைவதற்கு முயற்சிகளை எடுக்கும் நபர்கள் சார்ந்த குழுக்களைச் சந்திக்கலாம். உங்கள் சந்தேங்கள் மற்றும் கேள்விகளை இவர்களுடன் பகிரிந்து கொண்டு அனுபவத்தின் அடிப்படையில் கிடைக்கும் பதில்களைப் பெறலாம்.
நல்ல உடல் நலத்தோடு வாழ்வாங்கு வாழ விருப்பமா! தினந்தோறும் இந்த இணையதளம் சென்று தேவையானதைக் கற்றுக் கொள்ளுங்கள்.

இணையத்தில் திருடும் நிறுவனம்

என்னதான் இணைய தளங்கள், நம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையும், தனிநபர் தகவல்களையும் பாதுகாப்பாக வைத்திருப்போம் என உறுதி அளித்தாலும், சில இணைய தளங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கையில், சில விளம்பர நிறுவனங்களின் புரோகிராம்கள், நம் தனிநபர் விருப்பங்களைத் திருடிக் கொண்டிருக்கலாம். இவற்றை எப்படி அறிவது? இதற்கு இணையத்தில் ஒரு தளம் உதவுகிறது. இதன் முகவரி http://www.privacychoice.org/whos_watching. இந்த தளத்திலிருந்து, நீங்கள் பார்க்கும் இணைய தளங்களில், நீங்கள் அறியாமல் உங்கள் பெர்சனல் தகவல்களைத் திரட்டும் நிறுவனங்கள் குறித்த தகவல்களை அறியலாம். இதிலிருந்து விலகிக் கொள்ளும் முடிவை நீங்கள் எடுக்கலாம்.  இந்த தளம் விட்ஜெட் எனப்படும் சிறிய புரோகிராம் ஒன்றைத் தருகிறது. இதன் மூலம் வேவு பார்க்க உதவிடும் தளங்களையும் நீங்கள் புறக்கணிக்கலாம். இந்த தளத்தில் நுழைந்தவுடன் Your Choicesஎன்னும் டேபினைத் திறக்கவும். இங்கு நீங்கள் விலக்க விரும்பும் தளங்கள் வகையினை நிர்ணயம் செய்திடலாம். தேர்ந்தெடுத்த தளங்களை விலக்கி வைக்கலாம். அல்லது இத்தகைய அனைத்து தளங்களையும் விலக்கலாம். இந்த இரண்டு ஆப்ஷன்களில் ஒன்றை ஏற்றுக் கொள்கையில், மேலும் மூன்று ஆப்ஷன்கள் உங்களுக்குத் தரப்படும். அவை Opt out through the Network Advertising Initiative, Optout with the TACO Firefox Addon, மற்றும்  Block Tracking Through your Browser ஆக இருக்கும். இவற்றில் எதனைத் தேர்ந்தெடுத்தாலும் மீண்டும் பல ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். இது குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், இந்த தளத்திலேயே அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அவற்றிற்கான பதில்கள் உள்ளன. அவற்றைப் படித்துத் தெளிந்து கொள்ளலாம். உங்கள் அந்தரங்கம் புனிதமானது. அது உங்களுக்கு மட்டுமே தெரிய வேண்டும். மற்றவர்களுக்கல்ல.


Photoshop செயல்முறை பயிற்சி

அச்சுப்பணி, வரைகலை, படங்கள் உருமாற்றம் போன்ற பணிகளைக் கம்ப்யூட்டரில் மேற்கொள்கையில் பேஜ்மேக்கர், போட்டோஷாப், இல்லஸ்ட்ரேட்டர், இன் டிசைன் போன்ற தொகுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. நம் கற்பனைத்திறனை முழுமையாகப் பயன்படுத்த இந்த தொகுப்புகள் உதவுகின்றன. இவை குறித்து பல நூல்கள் இருப்பினும், இவற்றைப் பயன்படுத்துகையில் ஏற்படும் சோதனைமுறைகளுக்கான வழிகாட்டி நூல்கள் அவ்வளவாக இல்லை. கல்லூரியில் அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு, ஆய்வுக் கூடத்தில் மேற்கொள்ளும் சோதனைகளுக்கும் தனி வழிகாட்டி நூல்கள் தேவைப்படுகின்றன. அதே போலத்தான் இந்த சாப்ட்வேர் தொகுப்புகளைப் பயன்படுத்து வோருக்கும், வழிகாட்டி நூல்கள் இருப்பது கற்றுக் கொள்வதை எளிதாக்கும். இந்த குறையை போட்டோஷாப் பயன்படுத்துவோருக்குத் தீர்க்கும் வகையில் வெளிவந்துள்ளது போட்டோஷாப் செயல்முறை பயிற்சிகள்  என்ற நூல். இதன் ஆசிரியர் வீரநாதன். நூலில் மொத்தம் 20 செயல்முறை பயிற்சிகள்  படங்களுடன் படிப்படியாக விளக்கப்பட்டுள்ளன. இவற்றின் தலைப்புகள் மிகவும் ஆர்வமூட்டும் வகையிலும், அனைத்து வகை பயிற்சிகளையும் தருவதாகவும் அமைந்துள்ளன. இத்துடன் தரப்படும் சிடியில், இந்த செய்முறைப் பயிற்சிகளை வீடியோவாகத் தரப்பட்டுள்ளது இன்னும் சிறப்பாகும். அத்துடன் இந்த நூல் முழுவதும் பி.டி.எப். வடிவிலும் தரப்பட்டுள்ளது. இந்நூலின் விலை ரூ. 125. நூல் வேண்டுவோர் ஆசிரியரை 0422–2323228  என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.